கமல் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடிய விக்ரம் படக்குழு
நவ 02, 2021
Advertisement
கமல் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வருகிறது "விக்ரம்". லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வரும் 7-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி நேற்று விக்ரம் படத்தின் படக்குழுவினரோடு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!