
இந்தியன் 2 பஞ்சாயத்து இனிதே நிறைவு?
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி "இந்தியன் 2" படத்தை முன்னுரிமை கொடுத்து ஷங்கர் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது ஷங்கர் தான் இயக்கி வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பர் மாதத்தில் "இந்தியன் 2" படத்தை ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. அதற்குள் கமல்ஹாசனும் "விக்ரம்" படத்தில் நடித்து முடித்துவிடுவாராம்.
"இந்தியன் 2" படத்திற்காக 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிப்பட்ட நிலையில் படம் மீண்டும் ஆரம்பமாகுமா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமானால் அடுத்த ஆண்டுக்குள் படம் வர வாய்ப்புள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!