
கேம் சேஞ்ஜர் படத்தில் விஜய்க்கு ஆதரவான வசனங்கள்
ஜன 07, 2025
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் "கேம் சேஞ்ஜர்". இப்படம் இந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும், ஒரு மாநில முதல்வருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிடுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாக இப்படத்தின் தமிழ் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கிலிருந்து வரும் படம் என்பதால் இங்கும் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிப்பட்ட வசனங்களை எழுதியுள்ளார்களாம்.
படத்தைத் தயாரித்துள்ள தில் ராஜு, விஜய் நடித்த "வாரிசு" படத்தைத் தயாரித்தவர். அதனால், அவரும் இப்படியான வசனங்களுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். படம் வெளியானதும் படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்துமா அல்லது சர்ச்சையை ஏற்படுத்துமா என்பது தெரிந்துவிடும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…