
ரீ ரிலீசாகும் பைரவா
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் "பைரவா".
ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
2017ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ம் தேதி திரைக்கு வந்த "பைரவா" படத்தை இப்போது தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2027ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1ம் தேதி மீண்டும் வெளியிடுகிறார்கள். சிம் சினி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…