
அரசியல் கேள்வி கேட்காதீங்க : டென்ஷனான ரஜினி
சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது. அடுத்த படப்பிடிப்பு ஜன 13ல் முதல் 25 வரை நடக்கிறது என்றார்.
அப்போது நிருபர்களில் ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்க முனைந்தார். இதனால் டென்ஷனான ரஜினி, ‛அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஓகே, தேங்க்யூ" என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!