விக்னேஷ் சிவனுக்கு பிடித்த புகைப்படம்
ஜூன் 20, 2021
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம். இருவரும் முன்பெல்லாம் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார் விக்னேஷ் சிவன். அவற்றைப் பார்த்து பலர் பொறாமை கமெண்ட்டுகளையும், வாழ்த்து கமெண்ட்டுகளையும் அள்ளித் தெளிப்பார்கள்.
சமீபகாலமாக இந்த காதல் ஜோடி தனி விமானத்தில் பறப்பதைக் கூட புகைப்படம் எடுத்து அவற்றை மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கொரோனா காலத்தில் லட்சங்களில் செலவு செய்து இந்த தனி விமானப் பயணம் தேவையா என்ற சர்ச்சை கூட வந்தது.
நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், நயனுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் பிடித்தது” எனக் கேட்டிருந்தார். அந்த புகைப்படத்தைத்தான் இந்த செய்தியின் இணைப்புப் புகைப்படமாகப் பார்க்கிறீர்கள்.
மற்றொரு ரசிகர் நயன்தாராவிடம் உங்களுக்குப் பிடித்தது எது ?, என்று கேட்டதற்கு "அவருடைய தன்னம்பிக்கை" என பதிலளிக்கிறார்.
லிவிங்-டு-கெதர் ஆக இருக்கும் இந்த காதல் ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறது என பலரும் கேட்டுவிட்டார்கள். ஆனாலும், இருவருமே அது பற்றி அமைதியாகவே இருக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!