
விஜய் தேவரகொண்டாவின் லிகர் புதிய சாதனை
தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் "லிகர்" படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்த போஸ்டருக்கு இதுவரையில் 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளதாம். இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய படம் ஒன்றின் முதல் பார்வைக்கு 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை என படக்குவினர் கொண்டாடுகிறார்கள்.
விஜய்யின் 65வது பட முதல் பார்வை அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 21ம் தேதியன்று வெளியாக உள்ளது. "லிகர்" படத்தின் முதல் பார்வை சாதனையை இந்த விஜய் 65 முதல் பார்வை முறியடிக்கிறதா எனப் பார்ப்போம்.
"லிகர்" படத்தை பூரிஜெகன்னாத் இயக்க விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!