விடுதலை படத்தின் டப்பிங் தொடங்கியது
ஜன 27, 2023
Advertisement
"அசுரன்" படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் "துணைவன்" சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார் .
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன. இந்த தகவலை படக்குழுவினர் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர். இப்படத்தை வரும் மார்ச் 31ம் தேதி ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழில் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!