
மா.பொ.சியை வெளியிடும் வெற்றிமாறன்
போஸ் வெங்கட் தற்போது "மா.பொ.சி" படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் தயாரிக்க, விமல் கதையின் நாயகனாக நடிக்க, சாயாதேவி நாயகியாக நடித்துள்ளார். பருத்தி வீரன் சரவணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட், இயக்குனர் வெற்றி மாறனுக்கு போட்டுக் காட்டினார். அவருக்கு படம் பிடித்து விடவே தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் படத்தை வாங்கி வெளியிடுகிறார். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
“மா.பொ.சி என்பது சிலம்பு செல்வர் மா.பொ.சியின் கதை அல்ல. அவருக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னை இளைஞன் ஒருவன் வாழ்க்கையை வித்தியாசமாக சொல்லும் படம். படத்தின் பணிகள் முடிந்து விட்டது. வெற்றிமாறன் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டதே படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இது தியேட்டர்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் போஸ் வெங்கட்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!