
பிளாஷ்பேக்: பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்
1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராஜகணபதி என்பவர் இயக்கி இருந்தார். சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், பிரபு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தார்கள். இவர்கள் தவிர எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், சி.கே.சரஸ்வதி, ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ்குமார், கல்லாபெட்டி சிங்காரம், வடிவுக்கரசி, அருந்ததி, சில்க் சுமிதா, சிலோன் மனோகர், ஹெரான் ராமசாமி, எம்.ஜி.ஆர்.நடராஜன், ஜோதி சண்முகம், ஜெமினி பாலு, காந்திமதி, சோழராஜன், வான்மதி, நியூடோன் கணேசன், பூரணம் விசுவநாதன், உசிலை மணி நடித்திருந்தனர். சில்க் ஸ்மிதா “நான்தானய்யா சிலுக்கு சிலுக்கு” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். மிகப்பெரிய கமர்ஷியல் பேக்கேஜாக வெளியான இந்த படம் பெரும் தோல்வி அடைந்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!