
சமந்தா விவாகரத்து : கங்கனாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வெங்கடேஷ்?
ஆனால், "தலைவி" பட நாயகியான கங்கனா ரணவத், அவர்கள் பிரிவு குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆண்கள் செய்யும் தவறுகளால்தான் விவகாரத்துக்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருந்தார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நாக சைதன்யா பழக ஆரம்பித்த பிறகு இது நடந்திருக்கிறது. அந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்துக்கு திறமையானர் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆமீர் கானுடன் நாக சைதன்யா ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவரைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நாக சைதன்யாவின் மாமாவான தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இன்ஸ்டா ஸ்டோரியில், “நாம் வாயைத் திறப்பதற்கு முன் நம் மனதைத் திறக்க வேண்டும். மனம் என்பது எண்ணங்களின் போக்குவரத்து. உங்கள் வழியை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவுக்குத்தான் வெங்கடேஷ் இப்படி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்கிறது டோலிவுட் வட்டாரம். எந்தவிதமான சர்ச்சைப் பதிவுகளையும் பதிவிடாத வெங்கடேஷ் இப்படி பதிவிட்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!