ஜனவரி 14க்குத் தள்ளிப் போன தெலுங்கு வாரிசு
ஜன 09, 2023
Advertisement
விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் "வாரிசு" படம் தெலுங்கில் "வாரிசுடு" என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. தமிழில் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்கு வெளியீடு சில நாட்கள் தள்ளி ஜனவரி 14ல் படத்தை வெளியிடுகிறார்கள்.
தெலுங்கு பதிப்பிற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம். தமிழ் பதிப்பிற்கான பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளை இசையமைப்பாளர் தமன் நேற்று விடியற்காலையில் தான் முடித்தார். படத்தின் டால்பி அட்மாஸ் மிக்சிங் வேலைகளும் இன்று விடியற்காலையில்தான் நிறைவடைந்துள்ளது. தற்போதுதான் படத்தின் "கன்டென்ட்" அனுப்பும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
தெலுங்கு "வாரிசு" பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் இன்று(ஜன.,9) காலை நடந்தது . அப்போது ஜன., 14ல் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீஸாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!