
தெலுங்கு திரையுலக அழுத்தத்திற்குப் பணிந்த வாரிசு தயாரிப்பாளர்
அப்போது பேசிய அவர் தனது "வாரிசுடு" படம் எந்த ஒரு படத்திற்கும் போட்டியல்ல. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுடன் இந்தப் படம் போட்டியில்லை. தெலுங்கு திரையுலகத்தினரின் ஆலோசனைப்படி படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிடுகிறோம் என்று கூறினார்.
தெலுங்கில் நேரடிப் படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்கள் தர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை எழுந்து வந்தது. பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் முதல் சில நாட்கள் நல்ல வசூலைப் பெறும் நிலையில் "வாரிசுடு" படத்தின் வெளியீட்டை தில் ராஜு தள்ளி வைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலகிருஷ்ணாவின் "வீர சிம்ஹா ரெட்டி" படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா" படம் ஜனவரி 13ம் தேதியும் வெளியாக உள்ளது.
"வாரிசுடு" படம் ஜனவரி 14ம் வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் "துணிவு" படத்தின் டப்பிங்கான "தெகிம்பு" படம் ஜனவரி 11ம் தேதியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!