வாரிசு - யுகே, ஆஸ்திரேலியா வசூல் விவரம்
ஜன 18, 2023
Advertisement
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் "வாரிசு". கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்கெனவே 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்தது.
இப்போது யுகே-வில் 6 நாட்களில் 7 லட்சம் பவுண்டு வசூலைக் கடந்துள்ளதாக படத்தை அங்கு வினியோகித்த அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. “யுகே பாக்ஸ் ஆபிசில் தளபதி விஜய்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருவாயை "வாரிசு, வாரசுடு" படங்கள் கொடுத்துள்ளன. தற்போது ஆறே நாட்களில் 7 லட்சம் பவுண்டுகள் வசூலைக் கொடுத்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் பல பெரிய தியேட்டர்களில் இப்படம் ஓட உள்ளது,” என அறிவித்துள்ளார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சம் பவுண்டுகள் என்பது 7 கோடி ரூபாய்
ஆஸ்திரேலியாவில் "வாரிசு" படம் 5 லட்சம் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது என அங்கு படத்தை வெளியிட்ட எம்கேஎஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் யுஎஸ் டாலர்களும், நியூசிலாந்தில் 58 ஆயிரம் யுஎஸ் டாலர்களும் இப்படம் வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 4 கோடியே 50 லட்சம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!