
நான்கே படங்கள் ரூ.450 கோடி வசூல்
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தென்னிந்தியப் படங்கள் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் அமைந்துள்ளன. தமிழில் "வாரிசு, துணிவு" ஆகிய படங்களும், தெலுங்கில் "வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி" ஆகிய படங்களும் இதுவரையிலும் 450 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளன. "துணிவு" படத்தைத் தவிர மற்ற படங்களின் வசூல் என்ன என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. "துணிவு" படமும் 100 கோடியைக் கடந்திருக்கலாம்.
இந்தப் படங்கள் மேலும் 100 முதல் 150 கோடி வரை வசூலிக்க வாய்ப்புண்டு. இப்படங்கள் முழுவதுமாக ஓடி முடித்த பின் அந்த வசூல் மொத்தமாக 600 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது. 2023ம் ஆண்டின் ஆரம்பமே அமர்க்கமாக உள்ளது என தமிழ், தெலுங்கு திரையுலகினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!