தொடர் வெற்றி படங்கள் : ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வரலட்சுமி
பிப் 23, 2021
Advertisement
தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிவிட்டது. கடந்த மாதம் தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் வரலட்சுமி இணைந்து நடித்திருந்த "க்ராக்" என்கிற படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் "ஜெயம்மா" என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இந்தநிலையில் கடந்த வாரம் தெலுங்கில் அவர் நடித்த மற்றொரு படமான "நாந்தி" வெளியானது. அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தெலுங்கில் தான் நடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!