
வணங்கான் பாடல் வேலைகள் ஆரம்பம்
இதனிடையே, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது படத்தின் பூஜையும் நடைபெற்று அதன் மோஷன் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக உள்ள "வாடிவாசல்" படம் எப்போது ஆரம்பமாகும் என்பதும் தெரியவில்லை.
"வணங்கான்" படத்தைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் சூர்யா, சிவா இயக்கும் படத்தில் நடிக்கப் போய்விட்டார் என்றும் பேச்சு உள்ளது. அதே சமயம், இயக்குனர் பாலா "வணங்கான்" படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை உருவாக்காத காரணத்தால்தான் படத்தைத் தள்ளி வைத்தார்கள் என்றும் மற்றொரு பேச்சு உள்ளது. இந்நிலையில் "வணங்கான்" படத்திற்கான பாடல் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் "அப்டேட்" கொடுத்துள்ளார்.
"வணங்கான், வாடிவாசல், சூர்யா 42" எது முதலில் வரும் ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!