வாரிசு வழியைப் பின்பற்றும் வாத்தி
பிப் 16, 2023
Advertisement
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் "வாரிசு". ஜனவரி 11ம் தேதி வெளிவந்த அப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியை ஒரு நாள் முன்னதாக ஜனவரி 10ம் தேதி இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் திரையிட்டனர். நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வராமல் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற விமர்சனம் வந்ததால் அந்தப் படம் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தது.
அந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார். அவர் இப்போது தனுஷ் நடித்துள்ள "வாத்தி" படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுகிறார். நாளை அப்படம் வெளியாக உள்ள நிலையில் "வாரிசு" படத்தைப் போலவே இன்று இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் பத்திரிகையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆனால், "வாரிசு" படம் போல குடும்பத்தினருடன் பார்க்க அனுமதி இல்லை, பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதித்துவிட்டார்கள்.
"வாரிசு, வாத்தி" இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு படங்களையும் தமிழில் ஒரே தயாரிப்பாளரே வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "வாரிசு" வழியில் "வாத்தி" செல்கிறார், என்ன நடக்கப் போகிறது என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!