
யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த தோனி
"லெட்ஸ் கெட் மேரீட்" என்ற அந்த தமிழ்ப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது யோகி பாபு கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
சினிமா படப்பிடிப்பின் போது ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் யோகி பாபு. அவர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது பள்ளி கிரிக்கெட் அணியின் வீரராக இருந்துள்ளார். அவர்களது அணி மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
யோகி பாபுவின் கிரிக்கெட் ஆர்வத்திற்காக அவருக்கு தான் பயிற்சியின் போது பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தோனி. அந்த பேட் உடன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!