
ஜெயிலர் 2: வெளியீட்டிற்கு முன்பே 70 கோடி வசூல்
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" படம் இன்று வெளியாகி உள்ளது. கடந்த வாரம் இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானது.
வெளியீட்டிற்கு முன்பாக இப்படம் சுமார் 70 முதல் 80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023ல் வெளியான "ஜெயிலர்" படம் பெரிய வசூலைக் குவித்த படமாக இருந்தது. அதன் தொடர்ச்சியான படம் என்பதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இன்றைய முதல் நாள் வசூல் உலக அளவில், 100 கோடியைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் குடும்பத்தினர் அதிகமாக வந்து பார்க்க வசதியாக இருக்கப் போகிறது.
"ஜெயிலர்" முதல் பாகத்தின் வசூல், மற்றும் "2.0" படத்தின் வசூல் ஆகியவற்றைக் கடந்து இந்தப் படம் வசூல் சாதனை படைக்குமா என்பதுதான் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!