வாடிவாசல் மேலும் தாமதம் : வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்
மார் 09, 2023
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க "வாடிவாசல்" படம் தயாராகும் என 2021ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் படத்தின் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாகியும் இன்னும் ஆரம்பமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
கடந்த வருடம் இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட்களைக் கூட நடத்தினார்கள். படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை சூர்யா சொந்தமாக வாங்கி வளர்க்கிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிமாறன் "விடுதலை" படத்திற்காக மட்டுமே பணிபுரிந்து வந்தார். அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
நேற்று அப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய வெற்றிமாறன், "விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியானதும் "வாடிவாசல்" படத்தை ஆரம்பிக்க உள்ளோம். அதற்குப் பிறகு "வட சென்னை 2" படத்தை இயக்குவேன்,” என அறிவித்தார்.
மார்ச் மாதம் 30ம் தேதி "விடுதலை" படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. அதற்குப் பின் ஆறு மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகலாம். எப்படியும் இந்த வருட இறுதிக்குள் "வாடிவாசல்" ஆரம்பமாக வாய்ப்புள்ளது. படம், இரண்டு வருடங்களாகியும் ஆரம்பமாகாமல் இருப்பதால் புதிய அப்டேட்டைக் கேட்டு சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!