ஆக., 7ல் டிரைலர், 14ல் ‛மகுடம் படம் ரிலீஸ்
ஆக 05, 2026
Advertisement
நடிகர் விஷால் இயக்குனராக களமிறங்கி உள்ள படம் ‛மகுடம்". அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தை ரவி அரசு இயக்கினார். படம் பாதி வளர்ந்த நிலையில் விஷாலுக்கும் அவருக்கும் மனகசப்பு ஏற்பட ரவி அரசு விலகிவிட்டார். பின்னர் இயக்கம் பொறுப்பை விஷால் ஏற்றார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இம்மாதம் ஆக., 14ல் படம் ரிலீஸாகும் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில் தற்போது அதை படக்குழுவினர் உறுதிப்படுத்தி உள்ளனர். படத்தின் டிரைலர் தொடர்பாக ஒரு அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் வருகிற ஆக., 7ம் தேதி டிரைலர் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். அதன் உடன் ஆக., 14ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். ஏற்கனவே அன்றைய தினம் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" மற்றும் நயன்தாரா, கவினின் ‛ஹாய்" ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன. இதனால் அன்றைய தினம் மும்முனை போட்டி நிலவுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!