
டாக்சிக் டிரைலர் - ஹிந்தியில் அதிக வரவேற்பு
இப்படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான டிரைலர் தற்போது மொத்தமாக 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்ட இப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. கன்னட டிரைலர் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், தமிழ் டிரைலரும் அதே அளவிலான பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது.
கன்னடத்தை விடவும் ஹிந்தியில் இந்த டிரைலர் இரு மடங்கு பார்வைகளைப் பெற்றுள்ளது. ஹிந்தியில் 24 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கில் 10 மில்லியன், மலையாளத்தில் 4 மில்லியனை நெருங்கியுள்ளது.
டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 52.8 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. யஷ் நடித்து இதற்கு முன்பு 2022ல் வெளிவந்த "கேஜிஎப் 2" படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 106 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது "டாக்சிக்" டிரைலர் அதில் பாதிக்கும் சற்றே குறைவான பார்வைகளையே பெற்றுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!