
இந்த வாரம், ஒரே ஒரு ரிலீஸ்….கர மட்டுமே…
ஏப் 27, 2026
Advertisement
2026ம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. மாதத்தின் கடைசி நாளான ஏப்ரல் 30ம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது. அன்றைய தினம் தனுஷ் நடித்துள்ள "கர" படம் மட்டுமே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு படங்கள் எதுவும் வெளியாகுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும். வரும் மே மாதத்தில் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடித்துள்ள "கருப்பு" படத்தின் வெளியீடு மே 14 என்று அறிவிக்கப்பட்டு தற்போது மே வெளியீடு என தேதி குறிப்பிடாமல் மாற்றப்பட்டுள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால் மே மாதம் குறைந்த படங்களே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026ன் இந்த நான்கு மாதங்கள் தமிழ் சினிமாவிற்கு சோதனையான காலமாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதை "கர" படம் மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மே மாதத்திற்குப் பிறகு முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!