மார்ச் மூன்றாவது வாரத்தில் மூன்று வெளியீடுகள்
மார் 16, 2022
Advertisement
2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் அலையுடன் ஆரம்பமானது. ஜனவரி மாதத்தில் 14 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 11 படங்களும் தியேட்டர்கள், ஓடிடி தளங்களில் வெளியாகின. ஆனால், மார்ச் மாதத்தில் கடந்த இரண்டு வாரங்களில் தியேட்டர்களில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தது. முதல் வாரத்தில் "ஹே சினாமிகா, முதல் மனிதன்" ஆகிய படங்களும், இரண்டாவது வாரத்தில் "எதற்கும் துணிந்தவன்" படம் மட்டுமே வெளிவந்தது.
இந்த மூன்றாவது வாரத்தில் நாளை மறுதினம் மார்ச் 18ம் தேதி “கள்ளன், குதிரைவால், யுத்த சத்தம்” ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களுமே மினிமம் பட்ஜெட் படங்கள்தான். அடுத்த வாரம் மார்ச் 25ம் தேதி "ஆர்ஆர்ஆர்" படம் தமிழகத்திலும் பெரிய அளவில் வெளியாக உள்ளதால் இந்த மாதத்தில் வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் வாரத்திற்கு இரண்டு, மூன்று முக்கிய படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. சில படங்களின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்ப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…