
குக் வித் கோமாளியா? நோ என்கிறார் இளம் நடிகை
டிக் டாக் பிரபலம், டான்சர் மற்றும் நடிகை என பன்முக திறமை கொண்டவர் தேஜூ அஸ்வினி. "பாரீஸ் ஜெயராஜ்", "என்ன சொல்ல போகிறாய்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். தேஜு, குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைவது குறித்து ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள தேஜு அஸ்வினி , "நஹீ... சத்தியமா இல்ல... எனக்கு சமைக்கவும் தெரியாது" என பதிலளித்துள்ளார். அப்படியானால் வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்கும் இளம் நடிகை யார்? என்ற தேடலில் நெட்டீசன்கள் இண்டர்நெட்டை அலசி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!