விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இதில் கரசாமி என்ற கேரக்டரில் நடிக்கிறார் தனுஷ். முதலில் படத்துக்கு கரசாமி என்ற தலைப்புதான் பரிசீலிக்கப்பட்டதாம். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் கருப்பு. இதில் கருப்பசாமி ஆக சூர்யா வருகிறார். சென்னையில் நடந்த கர பாடல்கள் வெளியீட்டு விழாவில் கருப்பசாமி வேடம் அணிந்தவர் சாமி ஆடி தனுஷிடம் அரிவாள் கொடுத்தார். அதை பயபக்தியுடன் தனுஷ் பெற்று கொண்டார். அதேபோல் மதுரையில் நடந்த கருப்பு பாடல் வெளியீட்டு விழாவில் கருப்பசாமி வேடம் அணிந்தவர் சூர்யாவிடம் அரிவாள் கொடுத்தார். படத்தில் கருப்பசாமி கெட் அப்பில் சூர்யா வருகிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தில் முருகன் வேடத்தில் சூர்யா வந்துள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!