இன்றுதான் வெளியானது சப்தம், காரணம் என்ன ?
மார் 01, 2025
Advertisement
அறிவழகன் இயக்கத்தில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடிப்பில் உருவான "சப்தம்" படம் நேற்று வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் வெளியானது.
சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையால் வந்த சிக்கலால் இப்படம் நேற்று காலை ரிலீஸ் என சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் காரணத்தை விடவும் முக்கியமான காரணம் இருந்துள்ளது. இப்படத்தைத் தயாரிப்பதற்காக பைனான்சியரிடம் வாங்கிய தொகையில் 9 கோடி ரூபாயை தயாரிப்பாளர் நேற்று வரை திருப்பித் தராமல் இருந்திருக்கிறார். அதனால், அவர் "என்ஓசி" தராமல் நிறுத்திவிட்டார்.
மற்ற மாநில வினியோகஸ்தர்கள் ஒரு தொகையைக் கொடுத்து படத்தை வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் வெளியிட அதற்குரிய தொகையைத் தயாரிப்பாளரால் திரட்ட முடியவில்லையாம். கடைசியில் நண்பர்கள், படத்தின் நாயகன் ஆதி, இயக்குனர் அறிவழகன் ஆகியோர் முன் வந்து உதவி செய்துள்ளனர்.
நேற்று மதியக் காட்சிக்கு மேல் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அனைத்து டாகுமென்ட் வேலைகளும் முடிய இரவு ஆகியுள்ளது. அதன்பின் பைனான்சியர் "என்ஓசி" கொடுத்துள்ளார். அதனால், இன்று காலை முதல் தான் படம் தமிழகத்தில் வெளியானது.
கடைசி நிமிடத்தில் தயாரிப்பாளர்கள் செய்யும் இப்படியான சிக்கலால், படத்தை வாங்கியவர்களும், படத்திற்காக முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாந்து போகிறார்கள். முன்கூட்டியே அனைத்து பைனான்ஸ் பிரச்சனைகளையும் முடிக்காமல் தயாரிப்பாளர்கள் எதற்கு ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொந்தளித்துள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!