
பிளாஷ்பேக்: காணாமல் போன சிவாஜி படம்
ஒரு காலத்தில் பிலிமில் தயாரான படங்கள் பல தற்போது அழிந்து விட்டது. டிஜிட்டல் மயத்திற்கு பிறகு பெரும்பாலான தியாகராஜர் படங்கள்கூட தப்பி விட்டது. ஆனால் பல முக்கியமான படங்கள் காணாமல் போய்விட்டது. பிலிமை பராமரிப்பது கடினமான வேலை மற்றும் செலவு பிடிக்கும் விஷயம் என்பதால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை கைவிட்டு விட்டனர்.
அவற்றில் சிவாஜியின் சில படங்களும் அடங்கும் என்பது வருத்தமான விஷயம். அதில் முக்கியமான படம் "செந்தாமரை". ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1962ல் வெளியான இப்படத்தில் சிவாஜி பத்மினி, கே.ஆர்.ராமசாமி மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இலங்கை தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்ட செந்தாமரை (பத்மினி) தன் தாய், சகோதரனை தேடி இந்தியா வருவதும் அவர்களை கண்டுபிடிப்பதும்தான் கதை. இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை விஸ்வநாதன்--ராமமூர்த்தி இசையமைக்க, கே.டி.சந்தானம் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் பாடல்களை எழுதினர். சித்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஏ.எல்.சீனிவாசன் இப்படத்தைத் தயாரித்தார். ஜி.விட்டல்ராவ் மற்றும் எம்.கர்ணன் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொண்டனர்.
இப்படத்தின் முழுமையான பிரதி எதுவும் இல்லை, ஒலி வடிவில் சில பாடல்களும் ஒளி வடிவில் சில பாடல்களும், சில புகைப்படங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!