தனுஷின் இட்லி கடை படத்தின் முதல் பார்வை வெளியானது
ஜன 01, 2025
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது "இட்லி கடை" எனும் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகின்றார். "டாவுன் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்" ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது.
இதன் படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் தனுஷூடன் ராஜ்கிரனும் இடம் பெற்றுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!