படமான நிஜ கடத்தல் சம்பவம்
ஜூன் 17, 2023
Advertisement
கரண், வடிவேலு, நடித்த "காத்தவராயன்", கதிர், ஹனி ரோஸ் நடித்த "காந்தர்வன்", கஸ்தூரி நடித்த "இ.பி.கோ 302" போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை. தற்போது இவர் இயக்கி உள்ள படம் "கடத்தல்". இந்த படத்தின் நாயகனாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜ்செல்வா ஒளிப்பதிவு செய்கிறார், எம்.ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியதாவது: சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். அது எந்த சம்பவம் என்பதை தற்போது கூற இயலவில்லை. படம் வெளிவந்ததும் தெரியும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு. தாய், தந்தையர் எவ்வளவோ சொல்லியும் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அப்படி தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதை இது.
இன்றைய இளைய தலை முறையினருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும். படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. என்கிறார் இயக்குனர் சலங்கை துரை.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…