
மெஸன்ஜரில் பேஸ்புக் பேய்
அக் 30, 2024
Advertisement
பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் "மெஸன்ஜர்". இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபு பக்கர் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் இலங்காமணி கூறும்போது “ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் இருக்கும் மெஸன்ஜரில் ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள். அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து ஸ்ரீராம் கார்த்திக் கேட்க, அதற்கு தான் இறந்து விட்டதாக சொல்கிறார். இறந்த பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார், அந்த பெண் யார் என்பதை ஸ்ரீராம் கார்த்திக் விடைத்தேடி செல்வதே இந்த மெஸன்ஜரின் கதை. பேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்றார். பேய்களில் எத்தனையோ வகை இருக்கிறது. இது பேஸ்புக் பேய் கதை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!