
ஆக., 28ல் ‛தனி ஒருவன் 2 அப்டேட்
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்தார். இதிலும் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க போகிறார். கடந்த சில வருடங்களாக தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவுள்ளது என கூறப்பட்டு வந்தாலும் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்கிறார்கள் . ஏனெனில், ஆகஸ்ட் 28ம் தேதியில் தான் கடந்த 2015ம் ஆண்டில் இப்படம் வெளிவந்தது. இப்போது அதே தேதியில் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!