
சமந்தா அனுபவித்த வேதனை : விஜய் தேவரகொண்டா பேச்சு
மயோசிடிஸ் நோய் பாதிப்பால் ஒருக்கட்டத்தில் எங்களிடம் கூட அவரால் பேச முடியவில்லை. எங்களை பார்க்கவும் விடவில்லை. கடும் வேதனையை அவர் அனுபவித்துள்ளார். இன்னும் அவர் முழுமையாக குணமாகவில்லை. இங்குள்ள லைட் வெளிச்சத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படும். இருப்பினும் அதையெல்லாம் கடந்து சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் உங்களின் அன்பு மட்டுமே. இதே சிரித்த முகத்தை செப்., 1 அன்றும் காண விரும்புகிறேன்"" என்றார்.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டில் கவர்ச்சி உடையில் வலம் வந்த சமந்தா விழா மேடையில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி பாடலுக்கு ரசிகர்கள் முன்னிலையில் நடனம் ஆடினர். சமந்தாவை பாடல் நடனத்தின்போது விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி சுற்றினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வைரலானது.
காதல் கலந்த குடும்ப படமாக உருவாகி உள்ள ‛குஷி" படம் செப்., 1ம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!