இளையராஜா சர்ச்சை குறித்து தங்கர்பச்சான் வெளியிட்ட பதிவு
ஏப் 19, 2022
Advertisement
பிரதமர் மோடி குறித்து இளையராஜா வெளியிட்ட கருத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது. அதையடுத்து இளையராஜாவை ராஜ்யசபா எம்பி ஆக்கப் போவதாகவும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும் போராடவும் வாதங்கள் புரிவதற்கும் வேறு எதுவுமே இங்கே இல்லையா? மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ,தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதேபோல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?"" என்றொரு கேள்வியை தங்கர்பச்சான் எழுப்பி உள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!