
தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தன
ஏப் 19, 2022
Advertisement
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சியின் சில ஷாட்டுகள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில், தனுஷ்- நித்யா மேனன் ஆகிய இருவரும் திருவிழா ஒன்றில் ஆடிப்பாடும் நடனம் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த காட்சிகளை நீக்கி வருகின்றனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!