ஆஸ்காரை குறிவைக்கும் தங்கலான்
மே 05, 2023
Advertisement
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் "தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடத்து வருகிறது. விக்ரமிற்கு அடிபட்டுள்ளதால் அவர் இல்லாத மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார் ரஞ்சித். இந்நிலையில் அடுத்த வருடம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் தங்கலான் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்த படத்தை ஆஸ்கார் , கேன்ஸ் போன்ற 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…