லைகர் பட தோல்விக்கு பின்னர் இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் குஷி படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவர்கொண்டா. கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஷம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். காதல் கலந்த எமோஷனல் படமாக உருவாகிறது. சமீபத்தில் இப்படம் வரும் செப்டம்பர் 1 அன்று வெளியாகும் என அறிவித்தனர். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்தின் முதல் சிங்கிள் "என் ரோஜா நீயே" என்கிற பாடல் வருகிற மே 9 அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த பாடல் 5 மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!