
தாலிய காணோம் : நடிகை வினோதினி புகார்
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‛‛ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது என மசாஜ் செய்ய ஸ்பா ஒன்றுக்கு சென்றேன். தாலி செயினை கழற்ற சொன்னார்கள். நானும் கழற்றி கொடுத்தேன். அதை ஒரு டப்பாவில் போட்டு வைத்தார்கள். மசாஜிற்கு பின் நன்றாக இருந்தது. அந்தசமயம் உறவினரின் இறப்பு செய்தி வந்ததால் நானும் தாலியை வாங்காமல் கிளம்பிவிட்டேன். இறப்பு காரியத்தை முடித்து விட்டு இரண்டு நாட்களுக்கு பின் அந்த ஸ்பாவிற்கு சென்று எனது தாலியை கேட்டேன். ஆனால் இல்லை என சொல்லிவிட்டனர். இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள் என எச்சரிக்கை செய்யவே இந்த வீடியோ"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!