
தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல்
படம் வெளியான மூன்று நாட்களில் 25 கோடி வசூலையும், ஒரு வாரத்தில் 50 கோடி வசூலையும் பெற்றதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தற்போது 11 நாட்களில் 75 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்து இந்த வருடத்தில் வெளிவந்த முதல் படமான "ஏஸ்" படம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய நிலையில் இப்படம் 75 கோடி வசூலைக் கடந்து அவருடைய இறக்கத்தை ஏற்றி வைத்துவிட்டது.
விஜய் சேதுபதி தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் "மகாராஜா" படம் 200 கோடி வசூலை நெருங்கிய படமாக முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இப்போது "தலைவன் தலைவி" இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!