ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின்
ஜூன் 03, 2026
Advertisement
வினோத் டைரக்ஷனில் விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சென்சாரில் சிக்கலை சந்தித்து வருகிறது.. அவரது பிறந்தநாளை முன்னிட்டு எப்படியும் வெளியாகிவிடும் என்று நினைத்த சூழலில், இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாவது கூட சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதற்கு காரணம் அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ட்ரெயின் திரைப்படம் தான்.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் தாணு தயாரித்துள்ள "ட்ரெயின்" திரைப்படம் தயாராகியும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. படத்தின் டிரெய்லர் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், ஜனநாயகன் படம் வெளியாகும் போது அதனுடன் சேர்த்து திரையரங்குகளில் ட்ரெயின் பட டிரைலரை வெளியிட தாணு திட்டமிட்டுள்ளார். அதனாலேயே அவர் ஜனநாயகன் ரிலீஸை ஆவலாக எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!