பஞ்ச தந்திரம் - ஆந்தாலாஜி படத்தில் ஸ்வாதி
ஏப் 24, 2021
Advertisement
சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஸ்வாதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவருக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது தெலுங்கில் உருவாகும் "பஞ்ச தந்திரம்" என்கிற ஆந்தாலாஜி படம் ஒன்று அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
ஒவ்வொரு உயரினமும் இந்த பூமியில் தன்னை பாதுகாத்து வாழ குறைந்தபட்சம் ஐந்தறிவாவது வேண்டும், என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறதாம். இதில் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா, சமுத்திரகனி மற்றும் பிரமானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனராம். அறிமுக இயக்குனரான ஹர்ஷா புலிப்புகா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!