
அடுத்தடுத்து அப்டேட்ஸ் : சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி
நேற்று தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள "வாடிவாசல்" படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஆந்தாலஜி படமான "நவரசா" வில் சூர்யா நடித்துள்ள "கிட்டார் கம்பி மேலே நின்று" படத்தின் புகைப்படங்கள், தகவல்கள், வீடியோக்கள் வெளியானது.
சூர்யா நடித்த படம் தியேட்டர்களில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக நடித்த "சூரரைப் போற்று" கடந்த வருடம் ஓடிடி தளத்தில் தான் வெளியானது. சூர்யாவின் அடுத்த படத்தை அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் பார்க்கத்தான் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் "வலிமை" அப்டேட்டுக்காக இரண்டு வருடங்களாக தவமிருந்த சூழ்நிலையில் சூர்யா படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இப்படி அடுத்தடுத்து சூர்யா பற்றிய படங்களின் அப்டேட்டுகள் வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!