
பொன்னியின் செல்வன் கடைசி கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் ?
கொரோனா அலை சமயம் படப்பிடிப்பை நடத்துவது கடினமான ஒன்று. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டும், அதையும் சீக்கிரம் முடிப்போம் என சமீபத்தில் "நவரசா" பற்றிய பேட்டிகளில் மணிரத்னம் சொல்லியிருந்தார். அப்படியென்றால் தற்போது ஆரம்பமாகியுள்ளது கடைசி கட்ட படப்பிடிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
படப்பிடிப்பு, முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முடிந்த பின் அடுத்த வருடம் இப்படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரையில் படம் பற்றிய முதல் அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்தவிதமான போஸ்டர்களையோ, புகைப்படங்களையோ படக்குழு வெளியிடாதது "பொன்னியின் செல்வன்" ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!