விஜய்யை தொடர்ந்து சுந்தர்.சி இயக்க ஆசைப்பட்ட இன்னொரு ஹீரோ
நவ 12, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் இயக்குனர், ஹீரோ என்று பயணித்து வரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டு வருகிறார். ஆனால் விஜய் வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்று முடிவெடுப்பார். ஆனால் சுந்தர். சியோ தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையைதான் சொல்லுவார். காரணம் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக சொல்ல முடியாது. இதன் காரணமாகவே இதுவரை விஜய்யை வைத்தது தான் படம் இயக்கவில்லை என்று அவரே முன்பு ஒரு மேடையில் சொன்னார்.
இந்த நிலையில் விஜய்யைப் போலவே உதயநிதியை வைத்தும் தான் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டதாகவும், அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் சென்னையில் நடந்த கலகத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் சுந்தர் சி. அது குறித்த அவர் கூறுகையில், இந்த கலகத் தலைவன் படத்தில் நாயகனாக நடித்துள்ள உதயநிதியை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தை இயக்குவதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் உதயநிதி நடிக்கவில்லை. அதன் காரணமாகவே சித்தார்த் நடித்தார். அந்த படம் அப்போது சூப்பர் ஹிட் ஆனது என்றார் சுந்தர். சி. இன்றைக்கு பல இயக்குனர்களின் படத்தை வாங்கி, அதை நம்பிக்கையோடு வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த மேடையில் பேசினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!