திருமணத்திற்கு தயாராகிறார் சுனைனா
ஜூன் 07, 2024
Advertisement
தமிழில் "காதலில் விழுந்தேன்" படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு "ரெஜினா" என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார்.
35 வயதான சுனைனா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் குறித்த தகவல் வெளிவரும்போதெல்லாம் அதனை உடனடியாக மறுத்து வந்தார். இந்த நிலையில் சுனைனா திருமணத்திற்கு தயாராகி விட்டதை அறிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ஆணின் கைக்குள் தன் கை அடங்கி இருப்பதான ஒரு படத்தை வெளியிட்டுள்ளார், மணமகன் மற்றும் திருமணம் குறித்த தகவல்கள் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!