
விசித்திர விளையாட்டு படம்: பாரதிராஜாவின் உதவியாளர் இயக்குகிறார்
மே 06, 2026
Advertisement
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீதிகா தற்போது இயக்குனராகி உள்ளார். பி.ஆர்.ஜி. ஜெகந்நாதன் பிக்சர்ஸ் பேனரில் ஸ்ரீதிகாவே தயாரித்து, இயக்கி வரும் படம் "டே 11". ஆதர்ஷ் மற்றும் மனோஜ் நாயகர்களாகவும் ஸ்வேதா அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர். ரவிச்சந்திரன், அபிமன்யு, தமிழ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனில் இசை அமைத்துள்ளார், செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து ஸ்ரீதிகா கூறும்போது, ""ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கொண்ட கலகலப்பான திரைப்படமாக "டே 11" உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒன்றை இதில் கூறியுள்ளோம். ஒரு விசித்திர விளையாட்டுக்குள் நுழையும் கதாபாத்திரங்கள், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கும்” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!