
ஓம் ரூ.100 கோடி வசூல் அறிவிப்பு இன்று வருமா ?
இருந்தாலும் படத்தின் வசூல் முதல் நாளில் 40 கோடி என்றும், இரண்டாவது நாளுடன் சேர்த்து 75 கோடி என்றும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்றும் 30 கோடியைக் கடந்திருக்கும் என்று சேர்த்து படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்ற அறிவிப்பை இன்று வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் வெளியான "குபேரா" படத்திற்குப் பிறகு "ஓ.ம்" படம் 100 கோடியை வசூலிக்க உள்ளது. தனுஷ் தமிழில் மட்டும் நடித்து வெளியான "இட்லி கடை, கர" ஆகிய படங்கள் தலா 50 கோடி வசூலை மட்டுமே கடந்ததாக சொல்லப்பட்டது. அந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக தோல்விப் படங்கள்தான்.
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…