
முந்தானை முடிச்சு-ஐ இயக்கும் பிரபாகரன்
பிப் 27, 2021
Advertisement
பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் 37 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் முந்தானை முடிச்சு. இப்படம் இப்போது சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீ-மேக் ஆகிறது. இதுப்பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் இப்போது இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் உடன் இவர் இணையும் 3வது படம் இதுவாகும். ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோ சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!