
இந்தியன் 2, விக்ரம் - இரண்டு மாதங்களுக்குப் பிறகே படப்பிடிப்பு
எனவே, தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கோடைக்கு முன்பாகவே கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் களைத்துப் போய் ஓய்வெடுப்பார். அதனால், தேர்தல் முடிந்து ஏப்ரல் மாதமும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அடுத்து மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதற்குப் பிறகு மட்டுமே அவரால் "இந்தியன் 2, விக்ரம்" படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும். "இந்தியன் 2" படப்பிடிப்பு கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் இயக்குனர் ஷங்கர் தெலுங்குப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு கமல்ஹாசன் முன்னுரிமை கொடுப்பார் என்பது தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!